உலக புத்தக தின நிகழ்ச்சி

ஊட்டி தாவரவியல் பூங்காவில் உலக புத்தக தின நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2023-04-23 18:45 GMT

ஊட்டி, 

தமிழக அரசு பொது நூலகத்துறை மற்றும் மைய நூலக வாசகர் வட்டம், மலைச்சாரல் தமிழ்க் கவிஞர் சங்கம் சார்பில், உலக புத்தக தின நிகழ்ச்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்தது. வாசகர் வட்ட தலைவி அமுதவல்லி தலைமை தாங்கினார். மாவட்ட மைய நூலகர் ரவி முன்னிலை வகித்தார். ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரஸ்வதி புத்தக வாசிப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக ஒவ்வொரு குடும்பத்திலும் தனிநபர் புத்தகம் வாசித்தால் தான் அறிவார்ந்த சமூகம் உருவாக்க முடியும் என உறுதி ஏற்கப்பட்டது. மேலும் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு புத்தகம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் புலவர் நாகராஜ், கவிஞர் ஜனார்தனன், அவ்வையார் விருது பெற்ற கமலம் சின்னம்மாள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்