தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது.;
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு 'நிதி ஆப்கே நிகத்' (வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்) என்ற பெயரில் திருச்சி மண்டல அளவிலான குறை கேட்கும் கூட்டம் வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி திருச்சி மண்டல அலுவலகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் பின்வரும் இடங்களில் இந்த குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:-
திருச்சி - சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துறையூர். புதுக்கோட்டை- செந்தூரன் பாலிடெக்னிக் கல்லூரி, லேனாவிளக்கு. அரியலூர்- ஆதித்யா காம்ப்ளக்ஸ், வி.கைகாட்டி. பெரம்பலூர்- புனித ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளி, திருமாந்துறை. கரூர்- பொன் கலைமகள் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, அய்யர்மலை.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் 1952-ன் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இந்த தகவலை திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் எஸ்.முருகவேல் தெரிவித்துள்ளார்.