தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.;

Update: 2023-01-16 17:48 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 13-ந்தேதி காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது, ஆறுமுகம் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

அதன்படி ஆற்காட்டை அடுத்த பூட்டுத்தாக்கு சி.எம்.சி. மருத்துவமனைக்கு கல்லீரல், இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

மூளைச்சாவு அடைந்த ஆறுமுகத்திற்கு ரேவதி என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்