காக்களூரில் மின்வாரிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

காக்களூரில் மின்வாரிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-06-08 09:28 GMT

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சூரைக்காற்றுடன் பெய்த மழையால் இங்குள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தது மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்ய 3 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் 3 நாட்களுக்கும் மேலாக மின் இணைப்பு வழங்கவில்லை என்றால் தொழில் மிகவும் பாதிக்கப்படும். மின்சாரம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொழிற்சாலைகளை மூடிவிட்டு சாவியை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால் காக்களூர் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு காணப்படட்டது.

இதுகுறித்து மின் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது காக்களூர், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, காக்களூர் குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்பை மாற்றி காக்களூர் தொழிற்பேட்டைக்கு பகல் நேரத்தில் வழங்க இருப்பதாகவும், மேலும் டிரான்ஸ்பார்மரை சீரமைத்து தொழிற்சாலைகளுக்கு மின் வினியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்