தொழிலாளி பலி

அய்யலூர் அருகே மொபட்- பஸ் மோதியதில் சுமை தூக்கும் தொழிலாளி பலியானார்.;

Update: 2023-06-29 19:45 GMT

அய்யலூர் அருகே உள்ள வேங்கனூரை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 66). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று காலை 6 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். கொல்லப்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார். அப்போது சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பஸ், மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பழனியாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து தொடர்பாக தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த பஸ் டிரைவர் முத்துகருப்பசாமி மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்