சின்னசேலம்
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள சேராகுப்பம், குறிஞ்சிகுழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ரமேஷ்(வயது 52). திருமணமான இவர் ஊர் ஊராக சென்று கியாஸ் அடுப்பு பழுது பாா்க்கும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சின்னசேலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்த ரமேஷ் நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக சேலம்-விருதாசலம் தேசிய நெடுஞ்சாலையில் காளசமுத்திரம் பிரிவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.