பழனி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 37). கூலித்தொழிலாளி. இவர் வேலைக்காக நேற்று பழனி சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மானூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அண்ணாநகர் பகுதியில் அவர் வந்தபோது, எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.