குழித்துறை அருகே ரெயில் மோதி கொத்தனார் சாவு
குழித்துறை அருகே ரெயில் மோதி கொத்தனார் இறந்தார்;
நாகர்கோவில்:
குழித்துறை அருகே ரெயில் மோதி கொத்தனார் இறந்தார்
மார்த்தாண்டம் அருகே உள்ள சிதறால் திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 29), கொத்தனார். இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சஜின் வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
இந்தநிலையில் அவர் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் அருகே உள்ள தண்டவாளத்தில் ரெயில் மோதி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.