மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
வாசுதேவநல்லூரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.
வாசுதேவநல்லூர்;
வாசுதேவநல்லூர் பாதை மறித்தான் தெருவைச் சேர்ந்தவர் ரவி மகன் முருகேசன் (வயது 38). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வாசுதேவநல்லூர் இமானுவேல் சேகரன் சிலை அருகே சாலையை கடந்தபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் முருகேசன் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய மாயவரம் புதுப்பேட்டை சுள்ளைகரை தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் பழனிவேல் (26) என்பவரை கைது செய்தார்.