பவானி அருகே சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி

பவானி அருகே சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி

Update: 2023-07-11 21:13 GMT

பவானி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காரமேடு பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது 57). தொழிலாளி. இவர் நேற்று பவானி அடுத்த கோணவாய்க்கால் பகுதியில் மொபட்டில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவும், மொபட்டும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட தர்மன் படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து சித்தோடு போலீசார் சரக்கு ஆட்டோ டிரைவர் கவுரிசங்கர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்