கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-02-19 18:44 GMT

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மேட்டு திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பதாஸ் (வயது 41). கட்டிட தொழிலாளி. இவர், சம்பவத்தன்று திருக்காம்புலியூரில் உள்ள திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையை தனது மோட்டார் சைக்கிளில் கடந்து செல்ல முயன்றார். அப்போது, ஈரோடு மாவட்டம் நல்ல கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக சின்னப்பதாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சின்னப்பதாசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து சின்னப்பதாசின் மனைவி கமலாவேணி கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்