சூளகிரி:-
தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). கூலித் தொழிலாளி. சொந்த வேலையாக சூளகிரி வந்திருந்த அவர், சம்பவத்தன்று இரவு ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் வங்கி அருகில் நடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற கார் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.