கார் மோதி தொழிலாளி பலி

மணப்பாறை அருகே கார் மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2023-09-04 19:55 GMT

மணப்பாறை அருகே கார் மோதி தொழிலாளி இறந்தார்.

தொழிலாளி

மணப்பாறையை அடுத்த தோப்புபட்டியை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 45). தொழிலாளியான இவர் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை காய்கனி மார்க்கெட் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது விற்றவர் கைது

*லால்குடி ரெயில்வே பாலத்தின் கீழ் மது விற்றதாக தாளக்குடி பஜனை மடத் தெருவைச் சேர்ந்த யோகநாதன் (33) என்பவரை லால்குடி போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 118 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உடலில் காயங்களுடன் பிணம்

*ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் உடலில் காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பதும், இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறை கைதிகளுக்கு கல்வி வகுப்பு

*திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,507 பேர் உள்ளனர். சிறைத்துறை டி.ஜி.பி.அமரேஷ்பூஜாரி உத்தரவின்பேரில் 10 நாட்களாக தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு மூலம் திருச்சி சிறை கைதிகளுக்கு அமைதி கல்வி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்பு தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை அனைத்து சிறை கைதிகளுக்காகவும் டி.வி.மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இதன் மூலம் கைதிகளின் மனதில் காணப்படும் தீமையான எண்ணங்கள் அகற்றப்பட்டு நல்ல சிந்தனைகளை மனதில் கொண்டு செயல்படவும், விடுதலைக்கு பின் குடும்பத்தை அமைதியான முறையில் நடத்திடவும் ஏதுவாக இருக்கும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்