சேலத்தில்ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலிகுடிபோதையில் தண்டவாளத்தை கடந்த போது விபரீதம்

Update: 2023-06-17 19:50 GMT

சேலம்

சேலத்தில் குடிபோதையில் தண்டவாளத்தை கடந்த தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பலியானார்.

தொழிலாளி

சேலம் சிவதாபுரம் மலங்காட்டான் தெரு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் பெருமாள் (வயது 40), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை பெருமாள், கொண்டலாம்பட்டி வட்டக்கிணறு பகுதியில் வசிக்கும் தனது தாயார் கோவிந்தம்மாளை பார்க்க சென்றார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்கு செல்வதாக தாயாரிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

பரிதாப சாவு

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அவர் மது வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு பெரிய கொண்டலாம்பட்டி முனியப்பன் கோவில் அருகே ரெயில் தண்டவாளத்தை கடந்துள்ளார்.

அதே நேரத்தில் அந்த வழியாக சென்னை-பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. ரெயில் வருவதை கவனிக்காமல் கடந்து சென்றதால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்து தொழிலாளி ெபருமாளின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடிபோதையில் நடந்த இந்த விபரீத சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்