மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஆழ்வார்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்

Update: 2022-05-25 15:11 GMT

கடையம்:

ஆழ்வார்குறிச்சி அருகே, மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தொழிலாளி

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிகுளம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் ராமமூர்த்தி (வயது 40). இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் சவுண்ட் சர்வீசில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் செட்டிகுளம் முப்புடாதி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. இதற்காக அவர் அங்கு ஒலிபெருக்கி அமைத்து மின் இணைப்பு கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

நேற்று முன்தினம் இரவு முப்புடாதி அம்மன் கோவில் பின்புறம் உள்ள மின்கம்பத்தில் ஸ்டே கம்பியை பிடித்தவாறு இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி போலீசார் அங்கு வந்தனர். ராமமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராமமூர்த்தி மின்சாரம் தாக்கி இறந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்