மின்வேலியில் சிக்கி தொழிலாளி சாவு
மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.;
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45). விவசாய கூலி தொழிலாளி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிச்சைபிள்ளை என்பவரது வயலில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் ராமச்சந்திரன் சோளக்காட்டுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது, அங்கு சோள வயலை சுற்றி போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.