லால்பேட்டை அருகேவீராணம் ஏரியில் மீன்பிடித்த தொழிலாளி நீரில் மூழ்கி சாவு

லால்பேட்டை அருகே வீராணம் ஏரியில் மீன்பிடித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Update: 2023-04-12 18:45 GMT


காட்டுமன்னார்கோவில், 

சிதம்பரம் அடுத்த லால்பேட்டை அருகே உள்ள பா.புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 68). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் வீராணம் ஏரி பகுதியில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். அதன்படி, சம்பவத்தன்று சிறிய படகில் சென்று மீன்பிடித்தார். பின்னர் இரவு 7.30 மணிக்கு கொள்ளுமேடு பகுதியில் இருந்து வீராணம் ஏரியின் வழியாக பா.புத்தூருக்கு படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, அவர் ஏரியின் உள்ளே தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, புத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடல் மீட்பு

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பகுதி மக்களின் உதவியுடன் கனகராஜியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்