குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

சாணார்பட்டி அருகே குட்டையில் மூழ்கி தொழிலாளி பலியானார்.;

Update: 2022-12-26 16:35 GMT

சாணார்பட்டி அருகே அஞ்சுகுளிபட்டி பகுதியில் உள்ள குட்டையில் இன்று காலை ஆண் பிணம் மிதப்பதாக சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், குட்டையில் மிதந்த ஆண் பிணத்தை தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அஞ்சுகுளிபட்டியை சேர்ந்த கூடை பின்னும் தொழிலாளி மதுரைவீரன் (வயது 30) என்பதும், குட்டையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்