ஊருணியில் மூழ்கி தொழிலாளி சாவு

சாயல்குடி அருகே ஊருணியில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-01-08 18:55 GMT

சாயல்குடி,

சாயல்குடி அருகே காமராஜர்புரத்தை சேர்ந்த ரெங்கசாமி (வயது 40). பனைத்தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கிராமத்தில் உள்ள ஊருணியில் குளிக்க சென்றவர் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதை தொடர்ந்து அவரை தேடி உறவினர்கள் ஊருணிக்கு சென்றனர். அங்கு ஊருணியில் இறங்கி தேடி போது ரெங்கசாமி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா அவரது உடலை கைப்பற்றி கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக சாயல்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்