பாம்பு கடித்து தொழிலாளி சாவு

தொழிலாளி

Update: 2023-01-28 19:30 GMT

விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம் புதுநகர் மாசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகவேல் (வயது 48). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் கரும்பு வெட்டும் கூலி தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 25-ந் தேதி நள்ளிரவு சிலுவம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்து மோட்டார் கொட்டகையில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது முருகவேலின் கையை பாம்பு ஒன்று கடித்து விட்டது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்