அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பெண்ணாடம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2022-08-20 13:48 GMT

பெண்ணாடம், 

ராமநாதபுரம் மாவட்டம் வல்லக்குளம் அருகே உள்ள அன்னோனி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). செம்மறி ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களாக ஊர் ஊராக சென்று 500-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்த்து வந்தார்.

அந்த வகையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்கு மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது.

விசாரணை

இதை கவனிக்காத நாகராஜ், மின் கம்பியில் மிதித்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்து விளை நிலங்களில் இருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு மேய்க்கும் தொழிலாளி அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்