மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு;

Update:2023-06-30 01:00 IST

பொள்ளாச்சி


பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). கூலி தொழிலாளி. இவர் மாக்கினாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்திற்கு தேங்காய் பறிக்க சென்றார். அப்போது தென்னை மரத்தில் ஏற பயன்படுத்தப்படும் இரும்பு ஏணி மேலே சென்ற உயர்அழுத்த மின் கம்பியில் மோதியதில் மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







Tags:    

மேலும் செய்திகள்