மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.

Update: 2022-10-11 20:26 GMT

வையம்பட்டியை அடுத்த தவளவீரன்பட்டி அருகே உள்ள பெரிய வெள்ளபட்டியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 41). இவர் தவளவீரன்பட்டி ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றும் வேலை செய்து வந்தார். மேலும், இவர் ஒப்பந்த மின்வாரிய ஊழியராகவும் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை பெரிய வெள்ளபட்டியில் ஒரு மின் கம்பத்தில் ஏறி பழுதுநீக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்து அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்