ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

சங்கரன்கோவில் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2023-06-06 19:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஆறுமுகபாண்டி (வயது 55). கூலி தொழிலாளியான இவர் குடும்பத்துடன் தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு செல்வதற்காக மதுரை பயணிகள் ரெயிலில் ஏறினார். அப்போது, அவர் ெரயிலின் படிக்கட்டில் அமர்ந்ததாக கூறப்படுகிறது.

சங்கரன்கோவிலை அடுத்த பாம்புகோயில் சந்தை அருகே வந்தபோது ெரயிலில் இருந்து ஆறுமுகபாண்டி தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகபாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்