தியாகதுருகம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

தியாகதுருகம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.;

Update: 2023-05-17 18:45 GMT

தியாகதுருகம், 

சங்கராபுரம் அருகே மோ.வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 48). தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த தொப்பளான் மகன் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் செங்கல் ஏற்றுவதற்காக தொழிலாளர்களுடன் கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலத்தில் உள்ள செங்கல் சூளைக்கு சென்றார். அங்கு டிராக்டர் டிரெய்லரில் நின்று செங்கல் ஏற்றிக்கொண்டிருந்தபோது சுப்பிரமணியன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்