வாகனம் மோதி தொழிலாளி சாவு
வாடிப்பட்டி அருகே வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.;
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே அய்யன்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 33). இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பழனிச்சாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக பழனிச்சாமியின் தாயார் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.