அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு

தேன்கனிக்கோட்டை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி இறந்தார்.;

Update:2022-09-04 22:55 IST

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கோனமாக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பி வரவில்லை. இந்நிலையில் பூதட்டிகொட்டாய் பஸ் நிறுத்தம் அருகில் எல்லப்பா நேற்று இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து வந்து எல்லப்பாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்