அருமனை,
அருமனை அருகே உள்ள மஞ்சலுமூடு பிறாகல் பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் கிணற்றில் பார்த்த போது ஒரு ஆண் பிணம் கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அருமனை போலீசாருக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
குழித்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் கிடந்த பிணத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளி ஷாஜி (வயது38) என்பது தெரியவந்தது. இவர் திருமணம் ஆகாத நிலையில் தனிமையாக வாழ்ந்து வந்தார். மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்தநிலையில் அவர் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜி கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.