உடலில் மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் தொழிலாளி பிணம்
தேன்கனிக்கோட்டை அருகே உடலில் மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் தொழிலாளி பிணம் கொலையா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை தாலுகா பெரிய ஆவேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மரியசாமி மகன் சின்னப்பா (வயது 40) என்பதும், கட்டிட தொழிலாளியான இவர், அங்குள்ளி கிராம சேவை மைய கட்டிடம் அருகில் பிணமாக கிடந்தார். அவர், உடலில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொழிலாளி உடலில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.