விஷம்குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம்குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.;

Update: 2023-07-24 19:04 GMT


விருதுநகர் சூலக்கரை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 42). நுகர்வோர் வாணிபகிட்டங்கியில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர் சம்பவத்தன்று இரவு வெளியே சென்றவர் மாத்திநாயக்கன்பட்டி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் அருகில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது மனைவி அமுதா மற்றும் மகன் அங்கு சென்று பார்த்த போது ராஜேஷ் கண்ணன் விஷம் குடித்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக விருதுநகர்அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அமுதா கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்