தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் பொரிக்காரதெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 49). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் திடீரென மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மாரிமுத்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாத வடிவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.