திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 43). தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. நேற்று முன்தினம் சங்கர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவதி, உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.