சாத்தான்குளம் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

சாத்தான்குளம் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-21 18:45 GMT

தட்டார்மடம்:

பேய்க்குளம் அருகே உள்ள செம்மண்குடியிருப்பை சேர்ந்த தங்கத்துரை மகன் தங்கசெல்வன் (வயது 28). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மது பழக்கத்துக்கு அடிமையான தங்கச்ெசல்வன் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அப்போது அதே பகுதியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்திலுள்ள புளியமரத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து தங்கத்துரை அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்