தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
சுல்தான்பேட்டை
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாபு மஞ்சிகி (வயது 40). இவருடைய மனைவி ரைனா. ஜாபு மஞ்சிகி கடந்த 4 ஆண்டுகளாக சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல் பகுதியில் உள்ள கோழி பண்ணையில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதற்கிடையே ஜாபு மஞ்சிகி தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 8-ந் தேதி வீட்டிற்கு மது அருந்தி வந்த கணவரை, மனைவி கண்டித்து உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஜாபு மஞ்சிகி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.