தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தட்டார்மடம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-05-09 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள சுகநகரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி (வயது 37). இவருக்கு 15 வருடத்துக்கு முன்பு ராஜலட்சுமி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராஜலட்சுமி பிரிந்து சென்று விட்டாராம். இதனால் 2-வதாக முத்துராணி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த பிறகு அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தையும், பெற்றோரும் உள்ளனர் என தெரியவந்தது. அதன்பின் அவர், சுடலைமணியிடம் எதுவும் கூறாமல் குழந்தை மற்றும் பெற்றோரை பார்க்க அடிக்கடி சென்றுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த சுடலைமணி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை வீரலிங்கம், தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். புகாரின பேரில் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்