வெள்ளமடம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வெள்ளமடம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-20 21:54 GMT

ஆரல்வாய்மொழி:

திருவாரூர் மாவட்டம் தண்ணீர்குன்னம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 33). இவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட வீரமார்த்தாண்டன்புதூரை அடுத்த சிவஞானபுரத்தில் சக தொழிலாளர்களுடன் தங்கி ரெயில்வே தண்டவாளத்தை பராமரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அறிவழகன் தான் தங்கியிருந்த அறையில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் வந்து அறிவழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவருக்கு வலிப்புநோய் இருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்