தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நாசரேத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-09 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் கந்தசாமிபுரத்தை சேர்ந்த சின்னத்துரை என்பவருடைய மகன் சரவணன் (வயது 33). பெயிண்டிங் தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுவீட்லின் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் சுவீட்லின், தனது குழந்தையுடன் திடீரென மாயமானார். மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதால் சரவணன் மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் சரவணன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்