தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கரூரில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் தொழிலாளி தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-08-09 18:54 GMT

தொழிலாளி

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பசுபதி லேவுட் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 34) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயக்குமாருக்கு கடந்த ஒராண்டாக சரியான வேலை ஏதும் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் செலவிற்காக வெளியில் கடன் வாங்கிய பணத்தையும் திருப்பி செலுத்த முடியாமலும் அவதி அடைந்து, மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது ஜெயக்குமார் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தின் ஜெயக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜெயக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்