தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை;

Update: 2023-03-16 18:45 GMT

புதுக்கடை:

புதுக்கடை அருகே உள்ள பறையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 44), கட்டிட தொழிலாளி. இவருக்கு சிந்து(38) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஜெகதீஷ் தாயாருடன் வசித்துக் கொண்டு வேலை பார்த்து வந்தார். மனைவியும், பிள்ளைகளும் பிரிந்து சென்றதால் கடந்த சில நாட்களாக ஜெகதீஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். சம்பவத்தன்று ஜெகதீஷ் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்