தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-02-06 19:21 GMT

கீழப்பழுவூர்:

அரியலூரை அடுத்த அருங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(வயது 39). இவர், தனது மனைவியுடன் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் திருப்பூருக்கு செல்ல மனைவியை அழைத்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சண்முகம் வெளியே சென்று கல்லக்குடி டாஸ்மாக் கடை அருகே உள்ள ஆலமரத்தடியில் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்