விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்;

Update: 2022-06-02 21:34 GMT

தஞ்சாவூர்

தஞ்சை அருகே காசாநாடு புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது52). கூலி தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி மற்றும் மகன் இறந்து விட்டனர். இதனால் இவர் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இவர் நாஞ்சிக்கோட்டை வெற்றி நகர் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் விஷம் குடித்துள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தஞ்சை பல்கலைக்கழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.









Tags:    

மேலும் செய்திகள்