விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-31 19:47 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் மதியழகன்(வயது 55). கூலி தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தீராத வயிற்று வலியும் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த மதியழகன், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதியழகனின் மனைவி கண்ணகி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்