விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விழுப்புரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே வேடம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் முரளி (வயது 46), கூலித்தொழிலாளி. இவர் வெங்கந்தூரில் உள்ள கருமகாரிய கொட்டகை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
குடும்ப பிரச்சினை மற்றும் கடன் பிரச்சினை காரணமாக முரளி தற்கொலை செய்துகொண்டதாக கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாடவே கடன் வாங்கி பணத்தை இழந்ததால் முரளி, தற்கொலை செய்து கொண்டார் என்று சமூகவலைதளங்களில் தகவல் வைரலானது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, கடன் பிரச்சினையால் முரளி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஆனால் அவர், எதற்காக கடன் வாங்கினார்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.