விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-10-10 18:07 GMT

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் ஊராட்சி அடியத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாயப் பெருமாள் (வயது 39). கூலித்தொழிலாளி. இவருக்கு யசோதா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக மாயப் பெருமாள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை குடும்பத்தினருக்கு தெரியாமல் விஷத்தை குடித்து விட்டார். மயங்கிய நிலையில் விழுந்து கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் பரிசோதித்தபோது மாயப்பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்