விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;
ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி ஏடி காலனியை சேர்ந்தவர் பாண்டி(வயது 48). கூலி தொழிலாளியான இவர் மனைவி அம்பாள் குடும்ப தகராறு காரணமாக தனது கணவரை பிரிந்து கடந்த ஓராண்டாக தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பூச்சிகொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.