கீழகிருஷ்ணன்புதூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கீழகிருஷ்ணன்புதூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கீழகிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் ரெத்தினதங்கம் (வயது63), விவசாய தொழிலாளி. இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு இன்னமும் திருமணம் முடியவில்லை. இதனால் ரெத்தினதங்கம் மிகுந்த கவலையில் இருந்து வந்தார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர். இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று வீட்டின் பின்பக்கம் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி ராஜலதா சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.