அய்யலூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
அய்யலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
அய்யலூர் அருகே உள்ள பாலத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 41). இவருக்கு குப்பம்மாள் (38) என்ற மனைவியும், 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதேபோல் பாக்கியராஜூவுக்கும் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த பாக்கியராஜ் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.