வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற தொழிலாளி கைது

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-10-16 15:14 GMT

பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமார் தலைமையில், வனவர் தயாளன் மற்றும் வனத்துறையினர் பேரணாம்பட்டு வனசரகம் பல்லலகுப்பம் காப்புக்காடு மேல்கொத்தகுப்பம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதிக்குள் ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் வன விலங்குகளை வேட்டையாட முயன்றதை பார்த்தனர். உடனடியாக அவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பேரணாம்பட்டு அருகே உள்ள குண்டலப் பல்லி கிராமத்தை சேர்ந்த பிரபு (வயது 34) என்பதும், மேல்கொத்த குப்பம் கிராமத்திலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்ததாகவும், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கி வாங்கியதாக தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்