கோட்டூரில் குடிநீர் குழாயை சேதப்படுத்திய தொழிலாளி கைது
கோட்டூரில் குடிநீர் குழாயை சேதப்படுத்திய தொழிலாளி கைது
கோட்டூர்
ஆனைமலை அருகே கோட்டூர் பொங்காளியூரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 35). தொழிலாளி. இந்த நிலையில் 16-வது வார்டு சுப்பையன் வீதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பொது குடிநீர் குழாய் உள்ளது.
இந்த நிலையில் தனது மனைவிக்கு போதுமான அளவு தண்ணீர் விடவில்லை என்று கூறி குடிநீர் குழாயை இரும்பு பைப்பை வைத்து அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் பொது சொத்தை சேதப்படுத்தியதாக வழக்குபதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.