போக்குவரத்து போலீசாருக்கு மோர், ஜூஸ் வழங்கும் பணி

திருவண்ணாமலையில் போக்குவரத்து போலீசாருக்கு மோர், ஜூஸ் வழங்கும் பணியை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-19 16:45 GMT

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் பகல் நேரத்தில் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தன்னலமின்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீசாருக்கு தினமும் மோர் மற்றும் ஜூஸ் வழங்கும் பணியை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

அப்போது திருவண்ணாமலை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் முத்துமாரி, சுப்பிரமணியன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்